"பொது மக்கள் குப்பை தொட்டியை தேடி சென்று இனி குப்பைகள் கொட்ட வேண்டியதில்லை. பணியாளர்கள் வீடு வீடாக சைக்கிளில் சென்று குப்பை சேகரிப்பார்கள். பின்னர் அந்த குப்பையை தெருவில் ஒதுக்குப்புறமாக வைக்கப்படும் தொட்டியில் கொட்டி மூடி வைப்பார்கள். ஒவ்வொரு வார்டிலும் 10 முதல் 15 இடங்களில் இந்த மாதிரி குப்பை கொட்டும் வளாகம் அமைக்கப்படும்."
--