Our Response to Koil Committee

 
The following letter has been sent to Vinayagar Koil Committee, who responded poorly to our previous request to conduct fair common elections, which is not held for last few years.
அனுப்புநர்:
தலைவர்
அன்னை வேளாங்கண்ணி நகர் பேஸ் I , விரிவு , அனெக்ஸ் மற்றும் நடராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம்
மதனந்தபுரம்
சென்னை 600125
 
பெறுநர்:
செயலாளர்
ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலய திருப்பணி சபா
ஆனந்த விநாயகர் கோயில்
அன்னை வேளாங்கண்ணி நகர்
மதனந்தபுரம்

 

வணக்கம் ,


நமது நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், நமது நகர் மக்களின் நலனுக்காக கட்டப்பட்ட விநாயகர் கோயிலை, நிர்வகிக்கும் தற்போதைய தங்கள் ஆலய நிர்வாக குழுவானது, முறையாக பொதுக்குழு கூட்டி, நமது நகர் மக்களால் தேர்ந்தெடுக்க படாமல் கடந்த சில வருடங்களாக தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறீர்கள்.

 

இதனால் , நமது நகர் வாசிகளது வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக, முறையாக நமது நகர்வாசிகள் அனைவருக்கும் தெரிவித்து, பங்கேற்க செய்து பொதுக்குழு நடத்தி தேர்தல் முறையில் கோயில் நிர்வாகிகளை தேர்வு செய்யக்கோரி உங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தோம்.

 

இதை சரியாக படிக்காமல் ,எங்களது நல்ல முயற்சியை புரிந்து கொள்ளாமல், முற்றிலும் உதாசீனப்படுத்தி, அவதுறாக, உண்மைக்கு புறம்பான புகாரை தாங்கள் காவல் துறைக்கு அனுப்பி உள்ளீர்கள். இது முற்றிலும் திசை திருப்பும் தவறான உள்நோக்கம் கொண்டது என்பது உங்களது புகாரையும் மற்றும் எங்களது கோரிக்கை கடிதத்தையும் படித்த அனைவருக்கும் விளங்கும்.

 

தாங்கள் காவல்துறைக்கு அனுப்பிய புகாரானது, உங்கள் தற்போதைய ஆலய குழுவின் தலைவரது  மற்றும் மற்றைய ஆலய நிர்வாக குழு உறுப்பினர்களது முழு ஒப்புதல் பெறாமல் அனுப்ப பட்டது என தெரிய வருகிறது.  தன்னிச்சையாக சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரில், இந்த அவதூறான புகாரை அவசர கோலத்தில், ஏன் அனுப்பி உள்ளீர்கள்?

 

தங்களது அவதூறான புகார் மனுவின் மீது, கீழ்க்கண்டவற்றிக்கு கட்டாயம் விளக்கம் தருமாறு கேட்டுகொள்கிறோம, தங்களது விளக்கங்களை பொருத்து, எங்களது சட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்:

 

1.      நமது நல சங்கம் சார்பாக அளித்த கோரிக்கை கடிதத்தில், எங்கேயாவது ஆலய திருப்பணி சபாவில் (corruption) ஊழல் சம்பந்தமான நிர்வாக தவறுகள் நடக்கின்றது என கூறி இருக்கின்றோமா ?
பிறகு ஏன் "நிர்வாக தவறுகள்" நடக்கிறது, என நாங்கள் சொன்னதாக  பொய்யான தகவலை தாங்களே  முன்வந்து கூறியது ஏன்? இது பல யூகங்களை எழுப்புகிறது.

 

2.       நமது நல சங்கம்  சாதி மத இன பேதமின்றி பணி ஆற்ற வேண்டும் என கூறி இருக்கும் தாங்கள் , ஆலய நிர்வாக குழுவினருக்கும் இது பொருந்தும் என்பதை நினைவு கொள்ள மறந்தது ஏன்?  தங்களை முறையான  பொதுகுழு தேர்தல் நடத்த சொல்வதுஎவ்வாறு  சாதி மத இன பேதத்தை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் கட்டாயம் எங்களுக்கு விளக்க வேண்டும். ?

 

3.      நாம் நமது  நகர் வாசிகளை கூட்டி பொதுக்குழுவால் மட்டுமே புதிய ஆலய குழு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம் .

நலச்சங்கம் தாங்களே புதிய ஆலய நிர்வாக குழுவை தேர்ந்தெடுப்பார்கள் என எங்கேயாவது தெரிவித்து இருக்கின்றோமா ?   பிறகு ஏன் பொய்யான புகாரை தெரிவித்து உள்ளீர்கள் ?

 

4.      நமது விநாயகர் கோயில் அமைக்க அன்றைய நமது நலச்சங்க உறுப்பினர்கள் கடுமையான முயற்சிகள் எடுத்து, அன்றைய பஞ்சாயத்தாரிடம்  நமது பூங்காவில் கோயில் நிறுவ முறையான அனுமதி பெற்றனர். நன்கொடைகள் வசூல் செய்து கொடுத்து, முறையான ஆலய நிர்வாக குழுவை ஏற்படுத்தினர் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

அதேபோல்  நமது நலச்சங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்ளளவும் , நலச்சங்கத்தில் பணியாற்றவும் நமது நகர் மக்கள் அனைவருக்கும் (கோயில் நிர்வாக குழுவினர் உட்பட) உரிமை உண்டு.

இன்றைய ஆலய குழுவில் உள்ள சில உறுப்பினர்களும், அன்றைய நலச்சங்கத்தில் இருந்தவர்களே என்பதை நினைவில் கொள்ள மறந்தது ஏன்?

 

நாங்கள் உங்களை முறையான தேர்தல் நடத்த சொல்ல,  ஏன் உரிமை இல்லை என்பதை தாங்கள் விளக்க வேண்டும்?

 

5.      உடனடியாக பொதுகுழு தேர்தல் நடத்த உங்கள் தலைவரும் மற்ற உறுப்பினர்களும்  அனுமதி அளித்தும், நீங்கள் மட்டும் நடத்துவதற்கு தயக்கம் காட்டுவதன் உள்நோக்கம் என்ன ?

 

6.       நமது நல சங்க உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பொறுப்பான பணிகளிலும் மற்றும் நல்ல  சமூக நிலைமையிலும்  உள்ளவர்கள்  .
இப்படி  நல்ல தகுதியான , நல்ல பொறுப்பில் உள்ள  நலச்சங்க உறுப்பினர்களை கொச்சை படுத்தும் விதமாக  , அவமான படுத்தும் விதமாக அவர்களை கொலை செய்ய துணிந்த ரவுடிகள் போல,  அடியாட்களை போல இந்த ஆலய புகார் கடிதத்தில் மிக கேவலமாக, அபாண்டமாக, உண்மைக்கு புறம்பாக உங்களது புகாரில் சித்தரித்து   காவல் துறையிடம்  தங்களது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டது , ஏன் ?


முறையான  பொதுக்குழு தேர்தல் நடத்த கோரி அகிம்சை முறையில் கடிதம் அனுப்பியது எப்படி குற்றம் ஆகும்?

 

இதில் வன்முறை எங்குள்ளது ?

 

நலசங்கத்தினரை வன்முறை கும்பலாக பொய்யாக, அவதூறாக  புகார் அளித்ததன்  உள்நோக்கம் என்ன ?

 

எதற்காக இந்த திசை திருப்பும் நாடகம்

 

இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், நலச்சங்கத்தின் சார்பாக காவல் துறை மற்றும் நீதி மன்றத்தை  கட்டாயம் அணுகி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

 

நமது நகரில் இயங்கும் குடியிருப்போர் நலச்சங்கமும், நலச்சங்கத்தினால் உருவாக்கப்பட்ட விநாயகர் ஆலய நிர்வாக குழுவும் நம் நகர் மக்கள் அனைவரது நலனுக்காக ஒற்றுமையுடன் பாடுபடுவது அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

முறையற்ற வழிகளை மீண்டும் தேடாமல், மிக விரைவில், நகர் மக்கள் அனைவருக்கும் தெரிவித்து, பொதுக்குழுவை கூட்டி, நமது நகர் மக்களால் முறையான ஆலய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு,

தலைவர்                                                    செயலாளர்

Copy to:(Along with separate covering letters)

1.       காவல் துறை ஆய்வாளர் (மாங்காடு)

2.       திரு. கோவிந்தராஜ் ( கவுன்சிலர், 156வது வார்டு)

3.      Chief Minister's Special Cell

4.      Collector of Chennai

5.      Corporation J.E.

6.       தலைவர் , ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலய திருப்பணி சபா.

 

Enclosed :

1.       கோயில் நிர்வாக குழுவினரது அவதூறான புகார் கடிதம்

2.       குடியிருப்போர் நல சங்கத்தின் கோரிக்கை கடிதம்

3.       நலச் சங்கம் கோயில்கட்ட, முறைப்படி பஞ்சாயத்தாரிடம் பெற்ற அனுமதி கடிதம்














( பின்னிணைப்பு பிரதிகளை பார்க்கவும் / Please refer attached Scanned copies of documents 1. Their response 2. Our Request 3. Permission letters from Panchayat )

மற்றும்  
 
 தங்களது மேலான கருத்துக்களை president@avnagar1.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 
மற்றும் நமது நலச்சங்கத்தின் இந்த பிரதி பலன் எதிர்பார்க்காத , நமதுநகர் வாசிகளின் நலனுக்காக மட்டும் செய்யப்படும் நன்  முயற்சிக்கு தங்களது ஆதரவையும் கருத்துக்களையும் தெரிவிக்க நமது நலச்சங்க தலைவரையும் &  நிர்வாக குழு உறுப்பினர்களையும் அணுகவும் ,
நன்றி !

                                    - இங்ஙனம், அன்புடன் ,
                                             தலைவர் , அன்னை வேளாங்கண்ணி நகர் பேஸ் I , விரிவு , அனெக்ஸ் மற்றும் நடராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம்

கோயில் நிர்வாக குழுவினரது உதாசீன புகார் கடிதம் :



நமது கோரிக்கை கடிதம் :













The above notices has been circulated to all our residents and got signatures from many of our residents.
Then the copies have been handed over to Temple committee members (some of them rejected receiving the documents). Awaiting for their positive actions to conduct common elections to form new Temple commitee which will be selected by all our residents(only).
--
<Click to view in big screen>
Reference Documents for Our Association's initiatives on building this Vinayagar temple.


திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

Let us unite together!
&
We will address our common concerns ourselves.