(Letter Copy To residents:)
To:
இளநிலை
பொறியாளர்
திரு.
ஜெயகுமார் அவர்கள்,
156 வது வட்டம், சென்னை .
அன்புள்ள ஐயா ,
பொருள்: நன்றி தெரிவித்தல்
மற்றும் புதிதாக அமைக்கப்படும் எமது நகர் சாலை சந்திப்புகளில் வேகத்தடை அமைக்க
கோருதல்
எமது நகர் தெருக்களுக்கு
தாங்கள் புதிதாய் தார் சாலைகள் அமைத்து கொடுப்பதற்க்கு, நகர் வாசிகள் அனைவரது
சார்பாகவும் எங்களது மனதார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
மேலும், தங்களுக்கு ஒரு
பணிவான விண்ணப்பம்:
இப்பொழுது இந்த புதிதாக
சாலைகளில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிக வேகமாக செல்கின்றனர். இது எங்கள் சாலைகளில்
செல்லும் குழந்தைகள் மற்றும் வயதான வர்களுக்கு மிக ஆபத்தான வகையில் உள்ளது. ஆகவே ,
தயைகூர்ந்து அனைத்து சாலை சந்திப்புகளிலும் (மூன்று & நன்கு புற சந்திப்புகள்
அனைத்திலும்) அனைத்து பக்கத்திலும் நல்ல வேகத்தடைகள் (தார் சாலைகள் அமைக்கும் போதே
) அமைத்து தருமாறு பணிவுடன்
வேண்டிக்கொள்கிறோம். மேலும் குழந்தைகள்
விளையாடும் இரு பூங்காக்கள் அருகிலும் தேவையான வேகத்தடைகள் அமைக்கவும்
வேண்டுகிறோம்.
மிக்க நன்றி .
இப்படிக்கு உண்மையுள்ள,
தலைவர் செயலாளர்